அனல் மின்சாரத்துக்கெதிராக மூதூர்வாழ் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
மூதூர் கிழக்கு சம்பூர் பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ள அனல் மின்சார நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூதூரில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் இன்று வியாழக் கிழமை மூதூர் கிழக்கு நாவலடி சந்தியில் எதிர்ப்பு ஆட்பாட்டத்தில் ஈடுப்படனர்.
இதற்கான ஏற்பாடுகளை மூதூர் பீஸ்ஹோம் மற்றும் கிறீன் றிங்கோ ஆகிய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து முன்னெடுத்தன.
இவ் ஆட்பாட்டத்தில் ஈடுபட்டோர் கருத்து தெரிவிக்கும் போது தமது மூதூர் கிழக்கு பிரதேசம் மிகவும் இயற்கை வளம் நிறைந்த பிரதேசமாகும்.இங்கு அதிகமானோர் விவசாயத்தையும்,மீன் பிடியையுமே நம்பி தமது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர்.
அப்படி இருக்கையில் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படுமாக இருந்தால் தமது இயற்கை வளங்களும் தொழிலும் பாதிக்கப்படும் என தெரிவித்தனர்.
அத்தோடு தமது பரம்பரையினருக்கும் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து நிலவுவதாக கவலை தெரிவித்ததோடு இவ் திட்டத்தை அரசு கை விடவேண்டுமெனவும் தெரிவித்தனர்.
இவ் ஆட்பாட்டத்தில் ஈடுபட்டோர் பின்வரும் வாசகங்களை ஏந்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மின்னுக்கா மண்ணை மலடாக்காதே,புற்று நோயும் சுவாச நோயும் எமக்கு வேண்டாம்,எம்மை எரித்து எல்லோருக்கும் வெளிச்சமா,இயற்கை இருக்க செயற்கை மின் எதுக்கு,திருகோணமலையின் பசுமையை பாதுகாப்போம்.