செய்திகள்

அனல் மின்நிலையத்திற்குப் பதிலாக இயற்கை திரவ எரிவாயு மின் நிலையங்களை அமைப்பது தொடர்பாக ஜப்பானுடனும் இந்தியாவுடனும் பேச்சு

சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின்நிலையத்திற்குப் பதிலாக இயற்கை திரவ எரிவாயு மின் நிலையங்களை அமைப்பது தொடர்பாக ஜப்பானுடனும் இந்தியாவுடனும் பேச்சுவார்த்தை நடாத்தப்போவதாக   அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 அனல் மின்நிலையங்களை அமைப்பதற்கு எதிராக சூழலியல் நிபுணர்கள் தொடர்ந்தும் அழுத்தம்கொடுத்துவருவதோடு, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே இந்த மாற்றுத்திட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை நடாத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக  தெரியவருகின்றது.

திரவவாயு மின் திட்டம் மற்றும் சாத்தியமான நிலையான தீர்வுகளை நோக்கி, நகர முடியும் என்று அரசாங்கம் நம்புவதாக  மின்சக்தி அமைச்சின் செயலர் சுரேன் பட்டகொடதெரிவித்துள்ளார்.

ஜப்பானில் அனல்மின்நிலையத்தை திரவ எரிவாயுத் திட்டமாக மாற்றமுடியுமென்றும், உலகளவில் திரவ எரிவாயுத்திட்டத்திற்கான கேள்வி அதிகரித்த நிலையில் காணப்படுவதால் மின்சாரக் கட்டணம் உயரும் நிலை தோன்றக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்  இலங்கையின்  பொருளாதாரத்தில் பாரிய தாக்கங்கள் நிகழக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும், நீண்டகால அடிப்படையில் மீள்சுழற்சி முறையிலான திட்டமொன்றை பின்பற்றவேண்டிய தேவையுள்ளதாகவும் அமைச்சர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

n10