செய்திகள்

அனுசா சிவராஜா, பண்டாரநாயக்க சென்னையிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டனர்

உலகின் பல நாடுகளிலிருந்தும் திருப்பி அழைக்கப்டப்ட 51 இராஜதந்திரிகளில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத்தூரகத்தில் பணியாற்றிய இருவரும் அடங்கியுள்ளனர். முன்னைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ‘அரசியல்’ நியமனங்களாக நோக்கப்பட்டவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திரும்ப அழைத்திருந்தார்.

அனுசா சிவராஜா, பி.எம்.யூ.என், பண்டாரநாயக்க ஆகியோர் சென்னையிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டிருப்பதாக ~ரைம்ஸ் ஒவ் இந்தியா| பத்திரிகை தெரிவித்தது. இவர்களுக்குப் பதிலாக வெளியுறவு சேவைத்துறையைச் சேர்ந்த இரு இராஜதந்திரிகள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.