செய்திகள்

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வருடாந்த பொதுச்சபை ஒன்றுகூடலும் புதிய நிர்வாகத் தெரிவும்

அண்மையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வருடாந்த பொதுச்சபை ஒன்றுகூடல் ஜெனீவா மாநகரில் நடைபெற்றது . அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையில் அங்கம் வகிக்கும் 10 கும் மேலான நாடுகளின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டன.

பொதுச்சபை ஒன்றுகூடலில் கடந்த ஆண்டில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் தாயக விடுதலையை நோக்கி முன்னெடுக்கப்பட்ட அரசியல் நகர்வுகளை ஆராய்ந்ததோடு தொடர்ந்தும் ஒரு அரசியல் திடசித்தத்தை நோக்கிய பாதையில் அதிகம் செயல்பட உறுதி எடுக்கப்பட்டது. அத்தோடு மக்களவையின் வேலைத்திட்டங்களை வலுப்படுத்தவும் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதுக்கேற்ற வகையில் உள்நாட்டு அரசியல் ,சர்வதேச உறவுகள் ,விடுதலை மற்றும் சமூக அரசியல் சார்ந்த சித்தாந்த ரீதியிலான கருத்தாக்கங்களை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதுவரை 14 நாடுகளை அங்கத்தவர்களாக கொண்டுள்ள அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை இதனை இன்னமும் விரிவாக்கம் செய்யும் பணியை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் புதிய நிவாகக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
– தலைவர்: பேராசிரியர் சிறிரஞ்சன் ( கனடா )

– உபதலைவர்: திரு மகேஸ்வரன் பொன்னம்பலம் (டென்மார்க் )
– பேச்சாளர்: திரு ஸ்டீபன் புஷ்பராஜா ( நோர்வே )

– செயலாளர்கள்: திருமதி அன்னா ஆணூர் ( சுவிஸ்)
திரு செபஸ்டியாம்பிள்ளை டன்ஸ்ரன் ராஜகுமார் (இத்தாலி )

– பொருளாளர்: திரு கனகரத்தினம் ரமணன் (நெதர்லாந்து)

– வெளியுறவு அரசியல் குழுவின் இணைப்பாளர்: திரு திருச்சோதி திரு (பிரான்ஸ் )

– ஊடக தொடர்பாளர்கள்: தேவா சபாபதி ( கனடா ), குருபரன் குருசாமி (சுவிஸ்)