செய்திகள்

“அனைத்து தீவிரவாத அமைப்புக்களையும் அழிக்க வேண்டும்”

பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து தீவிரவாத அமைப்பு களையும் அழிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று இஸ்லாமாபாதில் ஊடகவியலாளர்களுடன் பேசிய போது இதனைத் தெரிவித்தார்.

பெஷாவர் பள்ளியில் நடத்தப் பட்ட தீவிரவாத தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்.

தலிபான், ஹக்கானி நெட் வொர்க், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் மிகப்பெரிய அச் சுறுத்தலாக உள்ளன. இந்த தீவிர வாத அமைப்புகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். தற்போது வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ் தான் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன.

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. எனவே இந்தியா, பாகிஸ்தான் இடையே தடைபட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்” எனவும்  அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் எல்லையில் இந்திய, பாகிஸ்தான் ராணுவங்கள் அண்மைகாலமாக பீரங்கி தாக்கு தல் நடத்தி வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, எல்லை விவகாரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இருநாடுகளும் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்கும் என நம்புகிறேன் என்றார்.

ஜான் கெர்ரியுடன் இணைந்து பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸும் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அவர் கூறியபோது, தெற்காசியாவில் அமைதியை ஏற் படுத்த அமெரிக்கா தனது செல் வாக்கை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த ஜான் கெர்ரி, இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையே பதற்றம் நீடிப்பதை அமெரிக்கா விரும்ப வில்லை, அனைத்து பிரச்சினை களுக்கும் இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.