செய்திகள்

அனைத்து மாகாண ஆளுநர்களையும் இராஜினாமா செய்யுமாறு அரசு உத்தரவு

மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.  இந்த இடங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கு வசதியாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குள் தமது இராஜினாமா கடிதங்களைக் கையளிக்க வேண்டும் என புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவிருக்கின்றார்கள்.

மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தன்னுடைய அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே ஆளுநர் நியமனங்களை மேற்கொண்டதாக புதிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. வடமாகாணத்துக்கான புதிய ஆளுநரை அரசாங்கம் நியமித்துள்ள போதிலும், முன்னைய ஆளுநர் சந்திரிசிறி தனது இராஜினாமா கடிதத்தை இதுவரையில் கைளிக்காததால் புதிய ஆளுநர் இதுவரையில் பதவியேற்கவில்லை.