செய்திகள்

அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வையே நான் விரும்புகிறேன்: அமைச்சர் நிரோஷன் பெரேரா

வடக்கு, கிழக்கில் அரசியல் தீர்வு என்ற விடயத்தில் எனது நிலைப்பாடு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு இதற்குத் தேவை என்பதே ஆகும் என இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-
அரசியல் தீர்வு என்னும் போது நாம் அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்த வேண்டியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இது குறித்து பேசியுள்ளார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு இதற்குத் தேவையாகும்.
ஒரு தரப்பைத் தவிர்த்து இதனை வழங்கமுடியாது. அவ்வாறு செய்ய முயற்சித்தமையினால்த் தான் கடந்த காலங்களில் பிரச்சினைகள் அதிகரித்தன. எனினும் கொடுக்க வேண்டிய அதிகாரங்களை வழங்குவோம். விசேடமாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை நாங்கள் தீர்க்க வேண்டும்.
அரச இயந்திரம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு கஷ்டப்படுகின்ற மக்களின் துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.