செய்திகள்

அபாயம் இன்னும் குறையவில்லை : விசேட நிபுணர்களின் பரிந்துரைகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

நாட்டில் கொவிட் 19 (கொரோனா) வரைஸ் பரவும் அச்சுறுத்தல் நிலைமை இன்னும் குறைவடையாத நிலையில் அது தொடர்பாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை நிலைமை வழமைக்கு திரும்பும் வரையில் முறையாக தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தெடர்பாக ஆராயும் வகையில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சுகாதார பிரிவினர் , பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட கொவிட் 19ஐ தடுக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபடும் பிரிவுகளை சேர்ந்தோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது இன்னும் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் குறைவடையாது இருப்பதால் இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் மற்றும் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடிக்கடி பரிசோதனைகளுக்கு உட்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படுபவர்களை சரியாக கண்டு பிடிப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் இதன்படி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளினல் முன்னெடுக்கப்படும் முறைமைகளை பின்பற்றுவது தொடர்பாகவும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை கொரோன வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் தீர்மானங்களை சுகாதார அதிகாரிகள் , வைத்தியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் பரிந்துரைகளுக்கமையவே எடுப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

-(3)