செய்திகள்

அபிவிருத்தி திட்டங்களின் தடைக்கு ஜனாதிபதி பொறுப்பல்ல ; சுசில்

நாட்டின் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தடைப்பட்டுள்ளமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்பு கூற வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் தற்போது அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தடைப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி தானே பொறுப்பு கூறவேண்டுமென கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்திகள் நிறுத்தபட்டமைக்கு ஜனாதிபதி பொறுப்புக் கூறத் தேவையில்லை . அரசாங்கத்தில் பலமிக்கவராக பிரதமரே இருக்கின்றார். இதன்படி அவர் தலைமையிலான அரசாங்கமே இதற்கு பொறப்பு கூற வேண்டும்.