செய்திகள்

அப்துல் கலாம் இன்று இலங்கை வரு­கிறார்: ஜனா­தி­பதி, பிர­த­மரை நாளை சந்­திப்பார்

இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜ­ய­மொன் றை மேற்­கொண்டு இன்று இலங்கை வரு கை தர­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமை ச்சின் ஊடகப் பேச்­சாளர் மஹி­ஷினி கோலோன் தெரி­வித்தார்.

இதற்­க­மைய, நாளை வெள்ளியன்று கலா­நிதி அப்துல் கலாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் சந்­திக்­க­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

வெளிவி­வ­கார அமைச்சில் நேற்று இடம்­பெற்ற வரு­டாந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட் டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டுகையில்,

மின்­சக்தி மற்றும் எரி­சக்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவின் அழைப்பின் பிர­காரம், அணு­சக்தி மாநாட்டில் கலந்து கொள்ளும் முக­மாக இன்­றைய தினம் இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாம் இலங்கை வருகை தர­வுள்ளார்.