செய்திகள்

அப்துல் கலாம், இலங்கை வருகிறார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள சக்தி மற்றும் வலு தொடர்பான மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொள்வதற்காக கலாம், இலங்கைக்கு வரவுள்ளார்.

இந்த மாநாடு எதிர்வரும் 26ஆம், 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.