செய்திகள்

அப்பாவுக்கே எனது ஆதரவு : வரலெட்சுமி

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கும், விஷால் அணிக்கும் கடும் போட்டி நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், சரத்குமாருக்கு எதிராக அவருடைய மகள் வரலெட்சுமி தான் விஷாலைத் தூண்டி வருகிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனை மறுத்த வரலெட்சுமி, அத்தகைய செய்திகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் –

உண்மை ஏதுமில்லாத முட்டாள்தனமான செய்திகளைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்து விட்டேன். நம்பகத்தன்மையான செய்திகள் இல்லை என்றால், எழுதுவதற்கு உரிமை இல்லை. நான் எப்போதுமே என் அப்பா சரத்குமாருக்குதான் ஆதரவு தருவேன் என்று தெரிவித்துள்ளார்.