செய்திகள்

அப்பா விளையாடுவதை நேரில் பார்க்க மும்பை வரும் டோனியின் மகள் ஷிவா

மும்பையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ்  மோதுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டி மீது பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளை தவிர பெரும்பாலும் இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினர் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண வருவது இல்லை. ஒருவேளை இந்திய அணி தோற்றுவிட்டால் தாங்கள் குறிவைக்கப்படலாம் என்ற பயம் தான் இதற்கு காரணம்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் டோனியின் மனைவியும் அவரது மகளும்(ஷியா) நாளைய போட்டியை நேரில் காண மும்பை வரவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஷியா கிரிக்கெட் விளையாட்டை ஓரளவு புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருப்பதாகவும், டோனிக்கும் இது உந்துசக்தியாக இருக்கும் என்றும் ஷியாவின் மாமா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டோனியின் சொந்த நகரமான ராஞ்சியில் உள்ள ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை கொண்டாட தயாராகி விட்டார்கள்.