செய்திகள்

அமானுஷ்ய உருவம் வெறும் மாயை என்கிறார்கள் ஆய்வாளர்கள்

தம்புத்தேகம ராஜபக்ஷகம எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக அமானுஷ்யமான உருவங்கள் சில உலாவுவதாக பிரதேச மக்களிடையே செய்திகள் பரவியுள்ள நிலைலயில் அந்த கிராம பகுதியில் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையமையொன்று ஏற்பட்டுள்ளது.

பெண் , ஆண் மற்றும் குழந்தையொன்று உட்பட மூன்று அமானுஷ்ய உருவங்கள் உலாவுவதாக பிரதேசமெங்கும் செய்திகள் பரவியுள்ளது. சிலர் அதனை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் அதன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான செய்திகளையடுத்து பலர் அந்த கிராமத்திலிருந்து வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அங்கு சென்ற மனோதத்துவவியல் ஆய்வு சங்கத்தின் தலைவர் பீ.என். வித்யாகுளபதி ஆய்வு நடத்தியுள்ளார். அவர் அங்கு, குறித்த மர்ம உருவத்தை பார்த்ததாக கூறியவர்களை சந்தித்ததுடன், இந்த உருவம் தென்பட்டதாக கூறப்படும் இடங்களையும் பரிசோதித்துள்ளார். எனினும் குறித்த மர்ம உருவம் தென்பட்டதாக கூறப்படுவது மனரீதியான பாதிப்பே என்று அவர் கூறியுள்ளார்.