செய்திகள்

அமிர்தலிங்கத்திற்கு சிலை அமைக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை

தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு வலி.மேற்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உருவச்சிலை அமைக்கப்படவுள்ளது.

இச்சிலையை அமைப்பதற்கான அனுமதியை வலி.மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நா.ஐங்கரன் கேட்டுள்ளார்.

வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஊடாக வடமாகாண முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வடமாகாண மக்கள் மட்டுமன்றி அனைத்துத் தமிழ் மக்களினதும் பேரபிமானம் பெற்ற முன்னாள் செயலாளர் நாயமும் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் அ.அமிர்தலிங்கத்துக்கு சிலை அமைப்பதற்கு வலி.மேற்கு சபை தீர்மானித்துள்ளது.

எனவே சிலை அமைப்பதற்கான அனுமதியை உடன் வழங்கி உதவுமாறு கோரிய அவசரக் கடிதம் வடமாகாணசபை அவைத்தலைவர் ஊடாக முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.