செய்திகள்

அமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி

கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் புளூரிட்ஜ்ஜில், இலங்கை   கடற்படையினருக்கு  பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இந்தக் கப்பலில் வந்த அமெரிக்க கடற்படையின் 7ஆவது கப்பற் படையணியின் தலைமை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின்,இலங்கை கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

எதிர்வரும் 31ஆம் திகதி வரை கொழும்பு  துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள அமெரிக்க  போர்க்கப்பலில் இலங்கை கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

ஆயுதங்களைக் கையாளுதல், சேதங்களைக் கட்டுப்படுத்தல், இளநிலை அதிகாரிகளுக்கான பரிமாற்றப் பயிற்சிகள், மேலதிக நகர்ப்புறச் சண்டைப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டுப் பயிற்சிகளிலும்  இருநாட்டுக் கடற்படையினரும் ஈடுபடவுள்ளனர்.

uss-blue-ridge-colombo-2 uss-blue-ridge-colombo-3

n10