செய்திகள்

ஃபெட்னா விழாவில் விக்னேஸ்வரன் பிரதம விருந்தினர்; மாதவன் , எமி ஜாக்ஸன் உட்பட பலர் பங்கேற்பு

அநேரிகக்வின் சான் பிரான்சிஸ்கோவில் அடுத்த மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் ஃபெட்னா என்ற வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 2015-ம் ஆண்டு விழாவில் வட மாகாண முதர்வர் சி. வி. விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.

தமிழ் திரையுலகிலிருந்து நடிகர் மாதவன், நடிகை எமி ஜாக்ஸன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது தொகுத்து வழங்க, நடிகை ஜெயஸ்ரீ, பாடகி மகிழினி மணிமாறன், பாடகர்கள் ஆலாப் ராஜு, ஹரிசரண் உள்ளிட்டோர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் இந்த விழாவில் இடம்பெறும். அத்துடன் பல தமிழறிஞர்கள், சிறப்புத் திறனாளர்கள் சொற்பொழிவாற்றவிருக்கிறார்கள்.

-madahvan-amy-600

இந்த ஆண்டு ஃபெட்னா விழா கலிபோர்னியாவின் சான் ஓசே நகரில் உள்ள சிட்டி நேஷனல் சிவிக் ஆடிட்டோரியத்தில் சிறப்பாக நடக்கிறது. ஜூலை 2-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை இந்த விழா நடைபெறும்.

வருடம் தோறும் இந்த நிகழ்வு அமெரிக்கா அல்லது கனடாவில் விழா நடப்பது வழக்கம். இந்த விழாவில் தமிழ் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் கலைஞர்கள் பலரும் பங்கேற்பார்கள். இலக்கிய, நாடக, இசை, சினிமா உலகைச் சேர்ந்த பலரும் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழமை. குறிப்பாக தமிழரின் நாட்டுப் புறக் கலைகள், தொன்மையான பறை இசை போன்றவற்றுக்கு இந்த விழாவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.