செய்திகள்

அமெரிக்காவின் ஒக்லஹாமா பிராந்தியத்தை திடீரெனத் தாக்கிய புயல்

அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா பகுதியில் திடீரென புயல் தாக்கியது. அப்போது பலத்த மழையும் பெய்தது. இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

அந்த பகுதியில் மரத்தால் கட்டப்பட்ட வீடுகளே அதிகமாக இருந்தன. அவற்றை புயல் காற்று தூக்கி வீசியது. ஏராளமான மரங்களும் விழுந்தன. புயலினால் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நகரின் பல பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

635665443759538422-AP-Severe-Weather-Kansas

635665449746073868-AP-Severe-Weather-Kansas.1

635666331542982888-AP-Severe-Weather-Oklahoma.3