செய்திகள்

அமெரிக்காவின் கணித மேதை ஜோன் நாஷ் கார் விபத்தில் பலி

கணிதவியலில் அரும்பெரும் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்திய அமெரிக்காவின் கணித மேதையான ஜோன் நாஷ் (86) இன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இடம்பெற்ற கார் விபத்தில் அவரது மனைவியுடன் பலியாகினார்.

புத்திக் கூர்மையும் பகுத்தறிவும் உடைய தீர்மானம் எடுக்கும் நபர்களுக்கிடையே முரண்பாடு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பிலான ஆட்டக் கோட்பாடு (Game Theory) இவரது கண்டுபிடிப்புக்களில் மேன்மையானது. இதற்காக அவருக்கு 1994ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஒஸ்கார் விருது பெற்ற ” ஒரு அழகிய உள்ளம்” (A Beautiful Mind) என்ற படத்திலும் நடித்து இவர் புகழ் பெற்றிருந்தார்.