செய்திகள்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்திற்கு வெளியே துப்பாக்கிசூடு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவர் நிலையம் அமைந்துள்ள பகுதிக்குள் நுழையமுயன்ற இருவரில் ஓருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் இன்னெருவர் படுகாயமடைந்துள்ளார்
மேரிலன்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண்கள் போன்று உடையணிந்த இருவர் தமது வாகனத்தை நிறுத்தாமல் உள்ளே செலுத்த முயன்ற வேளை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது ஓருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதையும்.மற்றொருவர் காயமடைந்துள்ளதையும் அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
இதன்போது அதிகாரியொருவருக்கும் சிறுகாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடாபுடையது அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.