செய்திகள்

அமெரிக்காவின் விமான தாக்குதல்களில் தனது அதிகாரிகள் பலி என்கிறது ஈரான்

ஈராக்கின் திக்கிரித் நகருக்கு அருகில் அமெரிக்க விமானப்படையினர் மேற்கொண்ட விமானதாக்குதலில் தனது இரு ஆலோசகர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவளை அமெரிக்கா அந்த பகுதியில் தான் விமானதாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளது.
கடந்த 23 ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், திக்கிரித்தைகைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஈரான் ஆதரவு குழுவினருக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்த இருவரே கொல்லப்பட்டுள்ளதாகவும் தெஹ்ரான் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க விமானதாக்குதல்களில் தனது அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது இதுவே முதல்தடவை.
ஈரானின் அணுவாயுத திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் அந்த நாடு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்த தகவலை ஈரான் வெளியிட்டுள்ளது.
எனினும் குறிப்பிட்ட திகதிகளில் தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும், ஈரானும் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.