செய்திகள்

அமெரிக்கா இஸ்லாமிய மதத்திற்கு எதிராக போராடவில்லை என ஓபாமா கருத்து

அமெரிக்கா இஸ்லாத்துடன் யுத்தம் செய்யவில்லை மாறாக அந்த மதத்தின் புனிதத்தை களங்கப்படுத்துபவர்களுக்கு எதிராகவே போராடுகின்றது என ஜனாதிபதி பராக் ஓபாமா தெரிவித்துள்ளார்.
60 ற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட தீவிரவாதம் குறித்த சர்வதேசமாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களை தீவிரவாதமயப்படுத்தும் கொள்கைளுக்கு எதிராக உலகம் போராடவேணடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அல்ஹைடா,ஐஎஸ் போன்ற அமைப்புகளுக்கு தலைமை வகிப்பவர்கள் மதத்தலைவர்கள் அல்ல, பயங்கரவாதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க படைகளை பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை இராணுவபலத்தால் மாத்திரம் வெல்ல முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் உலக நாடுகளில் உள்ள பல முஸ்லீம்கள் ஐஎஸ் அமைப்பின் வன்முறைகளை ஏற்றுக்கொள்வதில்லை,எனினும் இஸ்லாம் மேற்குலகின் விழுமியங்களால் மாசுபடுத்தப்படுகின்றது என்ற கருத்தை நம்புகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.