செய்திகள்

அமெரிக்கா எச்சரிக்கை

சர்வதேச அளவில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்கா தனது பிரஜைகளை எச்சரிக்கையாக இருக்கும்படி கோரியுள்ளது.
பிரான்ஸ் உட்பட பல இடங்களில் சமீபத்தில் இடம்பெற்றுள்ள பயங்கரவாததாக்குதல்கள் அமெரிக்க பிரஜைகள் உயர்ந்த பட்ச விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு,வடஆபிரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தனது நலன்களும், பிரஜைகளும் தாக்குதலுக்குள்ளாகலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.