செய்திகள்

அமெரிக்கா-கியுபாவிற்கு இடையிலான உறவுகளில் புதிய ஆரம்பம்

அமெரிக்காவும் கியுபாவிற்கும் இடையிலான புதிய வர்த்தக மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
அமெரிக்க பிரஜைகள் கியுபாவில் கடனட்டைகளை பயன்படுத்த அனுமதிப்பது,அமெரிக்க வர்த்தகர்கள் சில தொழில்நுட்பங்களை கியுபாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது உட்பட பல சாதகமான விடயங்கள் இந்த புதிய விதிமுறைகளில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறைமூலமாக கியுபாவின் சுருட்டுகளுக்கான தடையும் முடிவிற்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1961 இல் துண்டிக்கப்பட்ட தடைகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கு கடந்த மாதம் இரு நாடுகளும் இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.