செய்திகள்

அமெரிக்கா பாஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனை

அமெரிக்காவின் பாஸ்டன் மராத்தான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷோக்கர் சர்னவ்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மராத்தான் போட்டியில் திடீரென குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர், 250 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சர்னவ்ன் வழக்கு விசாரணை கேம்பிரிட்ஜில் நடைபெற்று வந்தது. 150 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. 20 நிமிடங்கள் வாசிக்கப்பட்ட தீர்ப்பில், குற்றவாளி சர்னவ்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு மிகச் சரியானது என்று மாசசூசட்ஸ் மாகாண தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது கடந்த 70 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள முதல் தூக்கு தண்டனை என்பது முக்கியதுவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.