செய்திகள்

அமெரிக்க அதிபரை கைகுலுக்கி வரவேற்ற இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் கைகுலுக்கி வரவேற்றார்.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று இரவு திடீர் பயணமாக கென்சிங்டன் அரண்மனைக்கு இரவு விருந்திற்காக சென்றார். ஒபாமாவுடன் அவரது மனைவி மிட்செல் ஒபாமாவும் சென்றிருந்தார்.

கென்சிங்டன் அரண்மனை சென்ற ஒபாமாவுக்கு அங்கு குட்டி இளரவசர் ஜார்ஜ் வரவேற்பு அளித்து அசத்தினார். ஒபாமாவை வரவேற்பதற்காக தூங்காமல் ஜார்ஜ் விழித்து இருந்தார். இரவுநேர உடையான வெள்ளைநிற பைஜாமா கவுனையும் சாதாரண ரப்பர் செருப்பையும் அணிந்து இருந்த ஜார்ஜ், ஒபாமாவை கைகுலுக்கி வரவேற்றார்.
பின்னர் தனக்கு பிடித்தமான ராக்கிங் குதிரையுடன் விளையாட சென்றுவிட்டார். இந்தப் படங்களை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது. தற்போது இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.