செய்திகள்

அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி இலங்கை வருகின்றார்

மே மாதம் முதல் வாரத்தில் ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க செயலர் ஜோன் கெரி இலங்கை வருகிறார் எனவும்;, அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் அமெரிக்காவுக்கு சென்றபோது அமெரிக்காவின் இராஜாங்க செயலரை இலங்கை வருமாறு அழைத்திருந்தார். இந்நிலையில் அவரின் வருகைக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதும் அவர் மே முதல் வாரத்தில் இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் போது அவர் அயல் நாடுகளுக்கும் செல்வார் எனவும் தெரிகிறது. கெரி இலங்கைக்கு வரும்போது இலங்கையில் தேர்தல் நடப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இதனால் கெரியின் வந்து சென்ற பின்னர் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை அமெரிக்கா கேட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.