செய்திகள்

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளை வேவு பார்த்த இஸ்ரேல்

அணுவாயுத திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவிற்கும், ஈரானிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் வேவுபார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை மறுத்துள்ளது.
வோல் ஸ்ரீட் ஜேர்னல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் தான் ஓட்டுக்கேட்ட விடயங்களை அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஈரான் அமெரிக்க பேச்சுவார்த்தைகளை எதிர்க்கும் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியது குறித்தே ஓபாமா நிர்வாகம் கடும் சீற்றமடைந்துள்ளது.
கடந்த வருடம் முதல் இஸ்ரேல் இந்த பேச்சுவார்த்தைகளை ஒட்டுக்கேட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது,மேலும் பல இரகசிய தகவல்களையும் சேகரித்துள்ளது,
இஸ்ரேலை வேவு பார்க்கும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளே இதனை கண்டுபிடித்தன. இஸ்ரேல் தான் ஓட்டுக்கேட்ட விடயங்களை அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஈரான் அமெரிக்க பேச்சுவார்த்தைகளை எதிர்க்கும் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியது குறித்தே ஓபாமா நிர்வாகம் கடும் சீற்றமடைந்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டடனர்
இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒருவரையொருவர் வேவு பார்ப்பது வழமையான விடயம், ஆனால் தான் அறிந்த அமெரிக்க இரகசியங்களை அமெரிக்க இராஜதந்திர செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக அதன் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டள்ளனர் என வோல் ஸ்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உறவுகளில் சிறிய விரிசல்கள் உருவாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தான் மீண்டும் பதவிக்கு வந்தால் பாலஸ்தீன தேசமொன்று ஏற்படுவதை அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தமை அமெரிக்காவை கடும் சீற்றத்தில் ஆழ்த்தியிருந்தது.