செய்திகள்

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் பிஸ்வாலை கூட்டமைப்பு நாளை சந்திக்கும்

கொழும்பு வந்துள்ள தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து பேசவுள்ளார்.

இந்தச் சந்திப்பு முற்பகல் 9.30 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

அவரது விஜயத்தின்போது அரச உயர் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ள அதேநேரம் நிஷா பிஸ்வால் வடக்குக்குச் சென்று வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதேவேளை உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் கொழும்பில் போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதல் தொடர்பில் பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.