செய்திகள்

அமெரிக்க கட்டளைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்

அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியைச் சேர்ந்த கட்டளைக் கப்பலான் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் ஆறுநாள் பயணமாக இன்று முற்பகல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்கப் போர்க்கப்பலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், சிறிலங்கா கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, இராணுவத் தளபதி, கூட்டுப்படைகளின் தளபதி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

சிறிலங்காவுடனான அமெரிக்காவின் கூட்டை வலுப்படுத்தும் வகையில், யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ்ஜின் இந்தப் பயணம் அமைந்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

n10

bb USSBlueRidge-Colombo-2 USSBlueRidge-Colombo-3 USSBlueRidge-Colombo-4