செய்திகள்

அமெரிக்க குடியுரிமை இருந்தாலும் அங்கு சென்றால் புலிகள் கொன்றுவிடுவார்கள்: கோதாபாய

“அர­சி­யல்­வா­திகள் என்னைக் கைது செய்­வ­தற்கு முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றனர். அத்­துடன் சிலர் உயிர் அச்­சு­றுத்­தலும் விடுத்து வரு­கின்­றனர். என்­னிடம் அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை உள்­ளது. ஆனால் நான் அங்கு சென்றால் புலி­களின் ஆத­ர­வா­ளர்கள் கொன்று விடு­வார்கள்” என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

சிங்­கள ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செய­லா­ள­ரான கோத்தபாய ராஜ­பக்‌ஷ இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:

“நான் எந்தக் குற்­றங்­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை. ஆனால் என்னைக் கைது செய்­யப்­போ­கின்­றனர் என அர­சி­யல்­வா­திகள் மிரட்­டு­கின்­றனர். அத்­துடன் என்னைக் கொலை செய்யப் போகின்­றனர் எனவும் அவர்­களில் சிலர் மிரட்­டு­கின்­றனர்.

நான் அர­சி­யல்­வா­தி­யல்ல தவிர அர­சியல் கட்சி ஒன்றில் உறுப்­பி­ன­ராகக் கூட இருக்­க­வில்லை. அப்­ப­டி­யி­ருக்­கையில் எந்த அடிப்­ப­டையில் என்னைக் கைது செய்­யப்­போ­கி­றார்கள். இந்த அர­சாங்கம் என்னைப் பழி­வாங்கும் நட­வ­டிக்­கையில் துரத்தித் துரத்தித் துன்­பங்­களைத் தரு­கின்­றது.

நான் அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை வைத்­தி­ருக்­கிறேன். ஆனால் அங்கு செல்ல மாட்டேன். ஏனெனில் அங்கு சென்றால் என்னைப் புலிகளின் ஆதரவாளர்கள் நிச்சயம் கொன்று விடுவார்கள்” என்றார்.