செய்திகள்

அமெரிக்க சஞ்சிகையின் கட்டுரைக்கு பொதுபலசேனா கடும் எதிர்ப்பு

அமெரிக்க சஞ்சிகையொன்றில் வெளியாகியுள்ள கட்டுரையொன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக பொதுபலசேனா தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக பொதுபலசேனாவை அவமானப்படுத்துவதற்காகவே இந்த கட்டுரை பிரசுரமாகியுள்ளமதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும், அமெரிக்க அரசாங்கத்துடன் நேரடியாக இது குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட கட்டுரை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறவேண்டும் என்பதற்காக அமெரிக்கா பாடுபடுவதை காண்பிக்கின்றது என்றும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது.