அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.
81 வயதான ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டுள்ளதுடன் ஏற்கனவே அவருக்கு இருதடவைகள் கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக வௌ்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் Karine Jean Pierre தெரிவித்துள்ளார். இதனையடுத்து,
Las Vegas-இல் இடம்பெறவிருந்த ஆதரவாளர்களுடனான சந்திப்பும் பிரசார நடவடிக்கையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகையின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
-(3)