செய்திகள்

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கி சூடு: 9பேர் பலி

அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பிரார்த்தனையில் ஈடுபடும் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயம் ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

21 வயதுடைய மர்ம நபர்9 மணியளவில் புகழ்பெற்ற இமானுவேல் ஏ.எம்.இ. தேவாலயத்துக்குள் புகுந்து பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டதாக சார்ல்ஸ்டன் போலீஸ் துறை செய்தி தொடர்பாளர் சார்லஸ் பிரான்சிஸ் கூறியுள்ளார். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கியால் சுட்ட நபரை தீவிரமாக தேடி வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.