செய்திகள்

அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அப்கானிஸ்தானில் பெண்கள் அச்சம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் இராணுவநடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில் தாங்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகலாம் என அந்த நாட்டின் பெண்கள் கவலை அச்சம் வெளியிட்டுள்ளனர்.
2001 இல் தலிபானிற்கு எதிராக ஆப்கானில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்த அமெரிக்கா,மேற்குலக பாணியிலான ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதிலும் ஒரளவு வெற்றிபெற்றது.
பெண்களுக்கு சட்ட ரீதியிலான பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன.அரசசேவைகள்,பாராளுமன்றத்தில் அவர்களுக்கு குறிப்பிட்ட வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து மீண்டும் பெண்கள் ஒடுக்கமுறைக்குள்ளவாது அதிகரிக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.