அமெரிக்க மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மட்டக்களப்பு விஜயம்
இலங்கைக்கான அமெரிக்க மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நிகொள் சுளிக் மட்டக்களப்பு விஜயம் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டுள்ளார்.
இன்று பிறபகல் இந்த விஜயத்தினை மேற்கொண்ட இவர் அமெரிக்க நிதியுதவியுடன் மட்டக்களப்ப ஹேட்வே கல்லூரியில் பயிற்சியை மேற்கொண்டுவரும் மாணவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகின்றது.
ஆங்கில மொழி பயிற்சி,தொழில் பயிற்சி,தலைமைத்துவ பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றது.
இதன்போது மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.