செய்திகள்

அமெரிக்க விமானப்படை தளத்தில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலியானதாக தகவல்

டெக்சாஸ் மாநிலம் சான் அன்டோனியோ நகரில் லேக்லேண்ட் விமானப்படை தளம் உள்ளது.விமானப்படை வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள ஒரு கட்டிடத்தில் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர். அப்போது அங்கு 2 பேர் இறந்து கிடந்தனர். இதையடுத்து அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

விமானப்படை வீரர் ஒருவர் தனது அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருப்பதாக ஏர் போர்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அருகில் உள்ள பள்ளிகள், குழந்தை பராமரிப்பு மையங்கள் அனைத்தும் மூடப்பட்டதாக விமானப்படை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.