செய்திகள்

அமேசானில் ஐ.எஸ் இயக்கத்தின் இதழ்கள் விற்பனை நிறுத்தம்

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ், தன் கொள்கைகளை வெளியிட ‘தாபிக்’ என்ற ஆங்கில மொழி இதழை வெளியிட்டு வருகிறது. இந்த இதழை அமேசான் நிறுவனம், அதன் வெப்சைட் மூலமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் இத்தாலியில் விற்பனை செய்து வந்தது.

தனது இணையதளம் மூலமாக பல இதழ்களை விற்பனை செய்து வந்த அமேசான். “CreateSpace Independent Publishing Platform” என்ற தொகுப்பின் கீழ் இந்த இதழ்தொகுப்பை விற்பனைக்கு வைத்திருந்தது. ஆனால், இந்த இதழ்தொகுப்பு தற்போது அமேசான் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமேசான் நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை