செய்திகள்

அமைச்சரவையின் அங்கீகாரமின்றி அமெரிக்க பிரச்சார நிறுவனங்களுக்கு 1.39 பில்லியன்- முந்தையஆட்சியில்.

அமைச்சரவையின் அங்கீகாரமின்றி அமெரிக்காவின் இரு பிரச்சார நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் 1.39 பில்லியன் ரூபாய்களை முன்னைய ஜனாதிபதி செயலகம் வழங்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலமாக தெரியவந்துள்ளது.
முன்னைய அமைச்சரவையின் அனுமதியின்றி, மத்தியவங்கியின் நாணயக்கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதியியுடன் முன்னைய ஜனாதிபதி செயலகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பியமை நிதியமைச்சு மேற்கொண்டுள்ள விசாரணைகளின் மூலமாக புலனாகியுள்ளது.
இலங்கை குறித்து அமெரிக்காவில் சிறந்த முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட இமாட்யுபேரி என்ற நபரிற்கு 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட நபர் அமெரிக்க ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என்பதும், அவரின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியவா என்பதும் குறிப்பிடத்தக்கது.பாக்கிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் சலீம் மன்டவிலாலா இவரை மகிந்த ராஜபக்சவிற்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன சுபேரி விவகாரத்தை நேரடியாக கையாண்டார், அவரின் உதவியுடன் சஜின் இன்னொரு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்,அதற்கும் மத்திய வங்கியே நேரடியாக நிதி வழங்கியது என்பதும் விசாரணைகளின் மூலம் புலனாகியுள்ளது.