செய்திகள்

அமைச்சரவை அனுமதித்தும் சம்பூரில் காணியை விடுவிக்க அறிவிக்காதது ஏன்? சம்பந்தன் கேள்வி

சம்பூர் மக்களின் 800 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அனுமதியும் பெறப்பட்ட நிலையில் அரசு இதனை இன்னும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இதற்கு யாருடைய அழுத்தம் காரணமென யோசிக்க வேண்டி இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிமை சம்பூர் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட சம்ப+ர் மக்களின் 9 ஆண்டு கால அகதி வாழ்க்கையையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையையும் உள்ளடக்கிய ~~கேட்காத குரல்கள் எனும் குறுங்திரைப்பட வெளியீட்டு விழா உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியல் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

சம்பூர் மக்களுடைய காணியில் 800 ஏக்கர் காணியையும் சம்ப+ர் மகாவித்தியாலயம் உள்ள 216 ஏக்கர் காணியையும் விடுவிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு இதில் முதல் கட்டமாக 800 ஏக்கர் காணியை விடுவிப்பதென முடிவுகள் எட்டப்பட்டுள்ள நிலையிலும் இந்த முடிவை பகிரங்கமாக அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.

இதற்கு யாருடைய அழுத்தம் இருக்கின்றது என யோகிக்க வேண்டியுள்ளது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது சம்ப+ர் மக்களுடைய காணியை வழங்காமல் இருக்க அழுத்தங்கள் பல கொடுத்து செயற்பட்டவர் மகிந்த ராஜபக்சவின் மனைவியுடைய சகோதரர் நிசான் விக்கிரமசிங்க.

இவர்கள் தங்களுடைய கம்பனிக்கு சம்ப+ர் காணி முழுவதையும் சுவீகரிக்கும் நோக்கிலேயே செயற்படடு வந்தார்கள். நான் சம்ப+ர் தொடர்பாக பாராளுமன்றத்தில் நீண்ட ஒரு உரையினை மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது ஆற்றினேன்.

அப்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச அனல் மின் நிலையம் அமைக்கும் இடத்தை தவிர்ந்த எனைய இடங்களில் மக்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் எனத் தெரிவித்தார். ஆனால் அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை.

மேலும் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றினை வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு போதும் இருந்தது கிடையாது. மாறாக வடக்கு, கிழக்கு பிரதேசம் தமிழர் பிரதேசம் என்பது நீக்கப்பட்டு இப்பகுதியில் சிங்கள குடியேற்றம், கலாசார மாற்றம் போன்ற விடயங்களால் உருக்குலைத்து இங்கு எந்தவொரு இனப்பிரச்சினையும் இல்லை என்று காட்டியே நாட்டை ஆண்டிருப்பார்.

அவர் 10 வருடங்களுக்கு தொடர்ந்து இந்த நாட்டை ஆண்டிருந்தால் அது தான் நடந்திருக்கும். நாமல் ராஜபக்ச அவருடைய ஆதரவாளர்களுடன் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் சம்ப+ரில் சில குடியேற்றங்களை செய்தார். ஆனால் சில நாட்களிலேயே அம்மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

எம்மக்களின் நிலத்தில் 250 கோடியில் ஆடம்பர மாளிகை கட்டினார்கள். இந்த நாட்டின் அதிகாரத்தில் இருந்து இவ்வளவு விரைவில் தூக்கி எறியப்படுவார்கள் என்று எண்ணம் வரவில்லை. அதனால் தான் எல்லாவற்றையும் தமக்கு நிரந்தரமானதாக செயற்படுத்தி வந்துள்ளார்கள். ஜனநாயகம் மதிக்கப்படாமல் இருந்தது. எனவேதான் தமிழ் மக்கள் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து அவரை ஜனாதிபதியாக்கினார்கள். இன்னும் அவருடைய செயற்பாட்டில் நாம் நம்பிக்கையுடன் இணைந்து செயற்படுகின்றோம். இது பாதகமா அமையுமானால் மாற்று வழிகளை கையாண்டு எமது மக்களின் காணிகளை மீட்போம் என்றார்.