செய்திகள்

அமைச்சர்களுக்கு சவால் விடும் ஆதிவாசிகள் கிரிக்கெட் அணி

ஆதிவாசிகள் கிரிக்கெட் அணியினர் அமைச்சர்களுடன் போட்டியிடுவதற்கு விருப்புவதாக தம்மான ஆதிவாசிகள் கிரிக்கெட் அணியின் தலைவர் ஊறுவரிகே ஹீன்பண்டா தெரிவித்துள்ளார்.
தமது அணி கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சர்களுடன் கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொண்டதாகவும் அதேபோல் தற்போதைய அரசாங்கத்துடனும் விளையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி போட்டியை தம்மான பாடசாலை மைதானத்திலோ அல்லது அமைச்சர்கள் விரும்பும் இடத்திலோ நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அப்படி வெளி மாவட்டத்தில் போட்டியை நடத்துவதென்றால் அதற்கான செலவுக்கு 50,000 ரூபா வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
n10