செய்திகள்

அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான இலஞ்ச, ஊழல் விசாரணைகள் பூர்த்தி?

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பாக இரகசியப் பொலிஸாரும், நிதி மோசடி விசாரணைப் பிரிவினரும் மேற்கொண்ட விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நிதிக் குற்ற விசாரணை பிரிவினர் கடந்த சில நாட்களில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரை அழைத்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணைகளில் நிதிக் குற்றங்கள் தொடர்பாக காரணங்களை உறுதி செய்துகொள்ள நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினருக்கு முடிந்துள்ளது.

விசாரணைகள் முடிவுற்ற “பைல்” கோவைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனம் உட்பட பல அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பாகவும்

வெளிநாட்டு அமைச்சினால் கொமன்வெல்த் நாட்டுத் தலைவர்களின் விசிலிமிணி மாநட்டுக்கு கொண்டு வரப்பட்ட பஸ் வண்டி தொடர்பான விசாரணையும் முடிவுறும் தறுவாயில் உள்ளன. மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக சட்ட ரீதியி லான ஆலோசனைகளும் பெறப்படுவ தாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.