செய்திகள்

அமைச்சர் பதவி: ரணில் பேரம் பேசியதாக கெஹலிய குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டால் தனக்கு அமைச்சர் பதவியை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வந்ததாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து தனக்கு அமைச்சர் வழங்க ரணில் முன்வந்திருப்பதாகத் தெரிவித்தார். சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசாங்கத்தில் சேர்ந்தால் அமைச்சர் பதவி ஒன்றைத் தனக்குத் தருவமதக ரணில் தெரிவித்தார் எனவும் அவர் கூறினார்.

தன்னுடன் ரணில் விக்கிரமசிங்க சுமார் 3 மணித்தியாலங்கள் உரையாடியதாகவும், ஜனசரி 8 ஆம் திகதிக்கு முன்னர் அப்போதைய அரசிலிருந்து வெளியேறினால், வலுவான அமைச்சர் பதவியை வழங்க தான் தயாராக இருப்பதாக ரணில் உறுதியளித்திருந்ததாகவும் ரம்புக்வெல தெரிவித்தார்.