செய்திகள்

அமைச்சர் ரிஷாட் அலுவலகத்தில் தாக்குதல்: 6 பிக்குகளை கைது செய்ய உத்தரவு

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த பௌத்த பிக்குமார் ஆறு பேருக்கும், கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அழைப்பாணை விடுத்தது. இதன்பிரகாரம், எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி, அவர்கள் அறுவரும் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்ததாக மேற்படி பிக்குமார்களுக்கு எதிராக கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆயினும் இந்த வழக்கில் பொலிஸார் பக்கச் சார்பாக செயற்பட்டதால் தொடர்ந்து வழக்கு இழுத்தடிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் மைத்திரி குணரத்தன, சிராஸ் நூர்தீன் மற்றும் சரத் சிறிவர்தன ஆகியோர் சுட்டிக்காட்டினர்.

இவர்களுக்கு அழைப்பாணை அவசியம் இல்லை, இந்த சந்தேக நபர்களை கைதுசெய்யவே நாம் நீதிமன்றை கோரினோம். அதற்கு இணங்காத நீதவான் திலின கமகே, கைது செய்யக்கூடிய குற்றம்தான் என்றாலும், அவர்களை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற முடியும் என்று தெரிவித்தார்.