அமைச்சு சலுகைள் எதுவும் வேண்டாம்: சஜித் பிரேமதாஸ
ஒரு அமைச்சருக்கான எந்த சலுகைகளையும் தான் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துள்ள டமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸ தனக்கான சம்பளம், உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ஆகியவற்றின் மூலமான பணம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நிதியத்திற்கு கையளிக்கப்படுமென்றும்கூறியுள்ளார்.
தனது புகைப்படத்தை அமைச்சில் எங்குமே காட்சிக்கு வைக்க வேண்டாமென்றும் என்றும் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சராக நேற்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றுகையில் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.