செய்திகள்

அமைதிகாக்கும் நடவடிக்கையில் இலங்கைப் படைகள்: ஐ.நா.வுடன் ஜனாதிபதி பேச்சு

இராணுவ வீரர்களை சர்வதேச அமைதி காக்கும் நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபடுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்துரையாடி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தியத்தலாவை இராணுவக் கல்லூரியில் 63 கெடட் உத்தியோகத்தர்கள் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு இதன்போது மரியாதை செலுத்திய ஜனாதிபதி, கெடட் உத்தியோகத்தர்களை உத்தியோகப்பூர்வமாக நியமிக்கும் வாள்களையும் வழங்கினார்.

அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக செயற்பட்ட அணியாக ரன்தெனிவல அணி இதன்போது தெரிவு செய்யப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க மற்றும் இராணுவ லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா ஆகியோரும் இந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.