செய்திகள்

அம்பாந்தோட்டை தெற்கு நெடுஞ்சாலை வேலைகளை நீட்டிக்க அரசு முடிவு

அம்பாந்தோட்டை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வேலைகளை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஆரம்ப திட்டத்தை ஆராய்ந்து இவ்வாறு முடிவு செய்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று கண்டியில் உரையாற்றியபோது அரசு அம்பாந்தோட்டை தெற்கு நெடுஞ்சாலை நீட்டிக்க சீனா எம்முடன் பேச்சுவார்த்தை நடாத்தி உள்ளது என்று கூறினார்.

மாத்தறை, காலி, மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களை இணைக்கும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை முன்னாள் அரசினுடைய திட்டமாகும். இந்த திட்டமானது அம்பாந்தோட்டையை விரிவாக்கும் ஓர் முயற்சியாக இருந்தது.

எனினும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு புதிய அரசாங்கம் ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மை குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து சீன நிதியுதவி திட்டங்கள் சிலவற்றை ஆய்வு செய்ய முடிவு செய்திருந்து.

எனினும் சரியான நடைமுறைகளின்படி நெடுஞ்சாலை திட்டங்கள் தொடரும் என்று கூறினார்.