செய்திகள்

அம்பாந்தோட்டை மேயர் கைதானார்

அம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெர்ணான்டோ பொலிஸ் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் பொலிஸ் நிலையமொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த ஒருவரை தாக்கிவிட்டு கைதியொருவரை கடத்த முயற்சித்த சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த வருடம் ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பிக்கள் குழுவொன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடுவதற்காக சென்றிருந்த போது கைத்தப்பாக்கியுடன் அவர்களை மிரட்டிய சம்பவத்துடனும் இவர் தொடர்புபட்டமை குறிப்பிடத்தக்கது.