செய்திகள்

அம்பாறையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் படங்கள்

முள்ளியவாய்க்கால் ஆறாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் அம்பாறை மாவட்டத்துக்கான பிரதான வைபவம் கல்முனை முருகன் ஆலயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கான ஆத்மசாந்திக்கான விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் யாகம் அபிசேக பூஜைகள் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சச்சிதானந்த குருக்களின் தலைமையில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஆலய முன்றிலில் நினைவுத்தீபங்கள் ஏற்றப்பட்டன.பின்னர் நினைவுரைகள் அதிதிகளால் நிகழ்த்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை,கோ.கருணாகரம்,மா.நடராஜா,எம்.இராஜேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள்,உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

IMG_0025 IMG_0052 IMG_0082 IMG_0083 IMG_0084 IMG_0085 IMG_0087 IMG_0092 IMG_0102 IMG_0104 IMG_0111 IMG_0124 IMG_0129 IMG_0132