செய்திகள்

அம்பிட்டியே சுமனரட்ன தேரரை நோக்கி துப்பாக்கிச் சூடு!

மட்டக்களப்பு ஶ்ரீ சுமங்கலாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரட்ன தேரர் நோக்கி இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்கள் அவரின் அறைக்குள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-(3)